தினம் ஒரு திருப்பாவை

Default Image
  • மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
  • பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம்

திருப்பாவை

பாடல் : 8

கீழ்வானம் வெள்ளென் றெஉமை சிறுவீடு

மெய்வான் பரந்தனகான்! மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்துநின்றோம், கேது கலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,

ஆவாவென் றராய் தருளேலோ ரெம்பாவாய்.

-ஸ்ரீ ஆண்டாள்-

பாடல் விளக்கம் :

மனமகிழ்ச்சியுடைய பெண்ணே! கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் சிறிது நேரம் விடுதலை பெற்று மேய்வதற்காகச் சென்று பரவியுள்ளன. நோன்பு செய்யும் இடத்திற் பலர் சென்றுவிட்டனர்.மீதமுள்ளவர்களும் அங்கே கும்பிடும் நோக்கத்தோடு புறப்படுகின்றனர்; அவர்களைப்  போகவிடாமல் நிறுத்தி வைத்து, உன்னை அழைக்க வந்து நின்றோம், எழுந்து வா! நம் இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரனது வாயைப் பிளந்தவன்; கஞ்சன் ஏவிய மல்லர்களை அழித்தவன்; தேவர்கல் எல்லார்க்கும் பெரிய தேவன்! அவனை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், ‘ஆ’ என்று வாய் திறந்து இரக்கம் காட்டி ‘வா’ என்று அழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்