தினம் ஒரு திருப்பாவை
- மார்கழி மாதம் மிகவும் மதிப்பிற்குரிய ஒரு மாதமாகும்.
- இம்மாத்தில் ஆழ்வார்களில் ஒருவராகிய ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களையும் அதன் பொருளையும் அறிவது மட்டுமல்லாமல் அதனைப் பாடி திருமாலின் அருளைப் பெறுவோம்.
திருப்பாவை
பாடல் ; 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பார்வைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்;நாட்கலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம் :
இம்மண்ணுலத்தில் வாழ்பவர்களே! நாம் நம் பாவை நோன்புக்குச் செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள் திருப்பாற்கடலிலே அறிதுயில் கொண்டுள்ள இறைவன் திருவடிகளைப் பாடுவோம் நெய் உண்ணமாட்டோம் ;பால் பருகமாட்டோம்; விடியற் காலையில் நீராடுவோம் கண்களுக்கு மைத் தீட்ட மாட்டோம்;கூந்தலில் பூ வைத்து முடிக்க மாட்டோம்;செய்யத்தக்காத எச்செயலையும் செய்ய மாட்டோம்;ஐயமும்,பிச்சையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடுவோம் இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம்.