தினம் ஒரு திருவெம்பாவை
- கைதான் தலைவைத்து கண்ணீர் ததும்மி வெதும்பி உள்ளம் என்று கண்ணீர் சொரிந்து உள்ளம் உருகி வழிபட்டார்.பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று இறைவனே வேண்ட திருவெம்பாவையை இயற்றி பாடினார் மாணிக்கவாசகர்.
- திருவெம்பாவையை மனமுருகி பாடி வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்,மணவாழ்க்கை மங்கலரமாக அமையும்.
திருவெம்பாவை
பாடல் : 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்?
-மாணிக்கவாசகர்-
பாடல் விளக்கம்:
சிவபெருமான் திருக்கோயிலைச் சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற் பணிப்பெண்களே! பாதாளம் ஏழுக்கும் கீழே, மலர்களை நிறையச் சூடிய அவன் திருமுடி, எல்லாப் பொருள்களும் கீழ்ப்பட மேற்ப்பட்டுள்ளது.அவன் உமையை ஒரு பாகத்தில் உடையவன்;ஆதலால் ஒரு திருமேனியுடையவனல்லன்,அவன் மறைகளுக்கு முதல்வன் விண்ணகத்தாரும்,மண்ணகத்தாரும் அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும், வரையறுத்துப் புகழ முடியாத உயிர்த்துணைவன்;தொண்டரகள் உள்ளத்தில் உறைபவன்! அவன் ஊர் யாது? அவன் பேர் யாது? அவனுக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் தன்மை எப்படி? கூறுவீர்களாக! என்று அருளிகிறார் மாணிக்கவாசகர்.