தினம் ஒரு திருவெம்பாவை
- எவ்வாறு இறைவனை உள்ளன் அன்போடு வழிபட வேண்டும் என்று மாணிக்கவாசகரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர்
- மார்கழி திருமால் மட்டுமல்லாமல் திருநீலகண்டனை கண்டு வணங்க வேண்டிய மாதமாகும்.அவ்வாறு வணங்கும் போது மாணிக்கவாசர் அருளிய திருவெம்பாவை பதிகத்தை பாடி வழிபட்டால் மிகுந்த பலன்
திருவெம்பாவை
பாடல் : 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எங்கனவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர் –
பாடல் விளக்கம்:
எல்லோரும் சேர்ந்து பாடுதல் முன்னே தோன்றிய பழைமையான எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டிருக்கும் பழமையான மூலப் பொருளே! அவ்வாறே பின்னே தோன்றும் புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக மீண்டும் தோன்றும் தன்மையனே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள்,உன் சிறந்த அடியார்களானோம், ஆதலால்,உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம் அங்ஙனமே அவர்களுக்கு உரிமையுடைவர்களாவோம் அவர்களே எங்கள் கணவர்கள் ஆவர். அவர்கள் விரும்பிக் கூறும் முறையிலேயே அடிமையாகிப் பணி செய்வோம்.எங்கள் தலைவனே! இந்த வகையன வாழ்க்கையையே எங்களுக்கு நீ வழங்குவாயானால் எந்தக் குறையும் இல்லாதவர்களாவோம்! என்று மாணிக்கவாசகர் அருளிகிறார்.