திருப்பாவை
பாடல் : 11
கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன் நில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! பேர்தராய்,
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் போருளோலோ ரெம்பாவாய்
– ஸ்ரீ ஆண்டாள்-
பாடல் விளக்கம் :
இடையர் கன்றுகளையும் கறவைப்பசுக் கூட்டங்கள் பலவற்றைப் பால் கறப்பர்,பகைவர்களின் வலிமை அழியும்படி சென்று போர் செய்வர்,குற்றம் ஒன்றுமில்லாதவர்,அவர்களது தங்கக்கொடி போன்ற பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் அழகிய மயில் போன்றவளே! எழுந்து வா! நம் உறவினராகிய தோழிமார் எல்லாரும் வந்து,உன் வீட்டு வாசலிலே புகுந்து முகில் வண்ணன் திருநாமத்தை பாடுகின்றோம்.செல்வ பெண்ணே!கொஞ்சம் கூட அசையாமலும்,பேசாமலும்,நீ எதற்காக இவ்வாறு உறங்குகின்றாய்? இதற்குப் பொருள்தான் என்ன? என்று அருளிகிறார் ஆண்டாள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…
ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள…
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…