தினம் ஒரு திருப்பாவை

Default Image
  • கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை திடமுறப்பாடி அந்த மாயவனை வழிபட்டு வந்தால் திருமணத்தடை அகலும்,மனம் தெளிவாகும், கணவன் மனதிற்கு ஏற்றாற்போல் அமையும் 
  • இன்றைய திருப்பாவையின் தொடர்ச்சியாக உள்ள பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்து கொள்வோம்

திருப்பாவை

பாடல் : 11

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்

குற்றமொன் நில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! பேர்தராய்,

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் போருளோலோ ரெம்பாவாய்

– ஸ்ரீ ஆண்டாள்-

பாடல் விளக்கம் :

இடையர் கன்றுகளையும் கறவைப்பசுக் கூட்டங்கள் பலவற்றைப் பால் கறப்பர்,பகைவர்களின் வலிமை அழியும்படி சென்று போர் செய்வர்,குற்றம் ஒன்றுமில்லாதவர்,அவர்களது தங்கக்கொடி போன்ற பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் அழகிய மயில் போன்றவளே! எழுந்து வா! நம் உறவினராகிய தோழிமார் எல்லாரும் வந்து,உன் வீட்டு வாசலிலே புகுந்து முகில் வண்ணன் திருநாமத்தை பாடுகின்றோம்.செல்வ பெண்ணே!கொஞ்சம் கூட அசையாமலும்,பேசாமலும்,நீ  எதற்காக  இவ்வாறு உறங்குகின்றாய்? இதற்குப் பொருள்தான் என்ன? என்று அருளிகிறார் ஆண்டாள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்