இவர்களை போன்றவர்கள் தான் கொலையாளிகள், அரக்கர்களை உருவாக்குகிறார்கள்! முதலில் இவரை சிறையிலடையுங்கள்! கடுப்பான கங்கனா!
- இவர்களை போன்றவர்கள் தான் கொலையாளிகள், அரக்கர்களை உருவாக்குகிறார்கள்.
- நடிகை கங்கனா ரனாவத் கண்டனம்.
டெல்லியில் 2012-ம் ஆண்டு, மருத்துவ கல்லூரி மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலையால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆறு பேரில், ஒருவர் சிறுவர் என்பதால், அவர் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டு பின், 2 ஆண்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். மற்றோருவர் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மீதமுள்ள 4 பேருக்கும், டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், நீதிபதி இந்திரா ஜெயசிங் குற்றவாளிகளை நிர்பயா தாயார் மன்னிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகை கங்கனா, நிர்பயா குற்றவாளிகள் 4 பேருடன் சேர்த்து, இந்திரா ஜெயசிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இந்திரா ஜெயசிங்க போன்றவர்கள் தான் கொலையாளிகள், அரக்கர்களை உருவாக்குகிறார்கள் என கூறியுள்ளார்.