போக்குவரத்து நெரிசலால் நமது மூளை நரம்புகள் பாதிக்கப்படுகிறதா.?! வெளியான ஷாக்கிங் ஆய்வு அறிக்கை…

Default Image

ஆட்டோமொபைல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசு மற்றும் அதிவுர்வுகளினால் மனித மூளையில் ஏற்படும் பாதிப்பு குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (UBC) நாட்டில் உள்ள உலகில் உள்ள பொதுவான போக்குவரத்து மாசுபாடு காரணமாக நமது மனித மூளையின் செயல்பாடு எவ்வாறு எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை குறித்து பொதுவான ஆய்வினை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அதன் அறிக்கை அண்மையில் வெளியானது. அதில் பல ஷாக்கிங் தாகவல்கள் வெளியாகி உள்ளன.

டீசல் வாகனங்கள் : டீசல் வாகனங்களின் 2 மணி நேரம் இயக்கத்திற்கு பிறகு நமது மூளையின் செயல்பாட்டில் சிறு மாற்றம் ஏற்படுகிறது. இது மூளையின் வெவ்வேறு பகுதிகளை தொடர்பு கொண்டு பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த பாதிப்பு அளவீடு எப்படி இருக்கிறது என்பதையும் அந்த அறிக்கையில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

மூளை செயல்பாடு : இதற்காக 25 நபர்களை வைத்து இந்த ஆய்வினை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் காற்று மாசு வெளிப்பாடு ஆய்வகத்தில்வைத்து செய்துள்ளனர். அந்த ஆய்வுக்கூடத்தில் டீசல் இயந்திரத்தின் மூலம் ஏற்படும் மாசுபட்ட காற்றை வெளிப்படுத்தியும், மேலும் அந்த இயந்திரத்தினால் ஏற்படும் அதிர்வுகளையும் கணக்கீடு செய்தும் அதன் மூலம் பாதிக்கப்படும் மூளையின் செயல்பாடு குறித்தும் அளவீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் போக்குவரத்து காற்று மாசுபாட்டினால் மனித மூளை செயல்பாடு பாதிக்கப்படுவதை அறிந்து அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழகத்தால் குறிப்பிடப்படுகிறது.

தற்காலிக முடிவுகள் : இந்த ஆய்வை மேற்கொண்ட கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வக அதிகாரியும் சுவாச மருத்துவ பேராசிரியருமான டாக்டர் கிறிஸ் கார்ல்ஸ்டன் கூறுகையில், உலகிலேயே முதன்முறையாக வாகனத்தினால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கும் மனித மூளைக்கும் இடையேயான தொடர்பை இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், இது தற்காலிகமான முடிவுகள் மட்டுமே. எனவும்,

அந்த ஆய்வகத்தில் சோதனை காலம் முடிந்த பின்னர் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டோர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆதலால் இயந்திரங்களினால் ஏற்படும் காற்று மாசுகள் தொடர்ச்சியாக நாம் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே விளைவுகள் நீண்ட காலம் இருக்கும் எனவும் கூறினார்.

முன்னெச்சரிக்கை :  மேலும் அவர் கூறுகையில், இந்த ஆய்வு முடிவுக்கு பின்னர், நீங்கள் உங்கள் காரின் ஏர் ஃபில்டர்களை நல்ல முறையில் சர்வீஸ் செய்து அது முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். மேலும், மிகவும் நெருக்கடியான டிராபிக் நிறைந்த சாலைகளில் செல்வதை தவிர்த்து, குறைவான போக்குவரத்து நெரிசல் இருக்கும் சாலையில் தேர்ந்தெடுப்பது நல்லது என்றும் டாக்டர் கிறிஸ் கார்ல்ஸ்டன் குறிப்பிட்டார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்