கிட்டத்தட்ட 6 படங்களிலிருந்து என்னை விலக்கினார்கள்.! ஆதங்கத்தை கூறிய பிரபல நடிகை.!

Default Image

தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களால் தன்னை 6 படங்களிலிருந்து விலக்கினார்கள் என்று தடம் பட நடிகையான வித்யா பிரதீப் கூறியுள்ளார்.

மீரா கதிரவன் இயக்கிய அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். தியானா என்ற பெயரில் பல படங்களில் நடித்த இவர் அதற்கு பின்னர் வித்யா பிரதீப் என்று தனது பெயரை மாற்றினார். அதனையடுத்து சைவம், பசங்க 2,அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2,தடம் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி உள்ள தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங்கின் மரணத்தை அடுத்து பல பிரபலங்கள் சினிமாவில் தங்களுக்கு நேர்ந்த விஷயங்களை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வித்யா பிரதீப் தனக்கு நேர்ந்த கொடுமை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தன்னை தடம் படத்தில் நடிப்பதற்கு முன்பு தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஒரு சில காரணங்களால் கிட்டத்தட்ட 6 படங்களில் இருந்து தன்னை விலக்கியதாகவும், அதன் பின்னர் படிப்பில் கவனம் செலுத்தி வந்த என்னை தடம் பட இயக்குநரை சந்திக்க கோரி காஸ்டிங் டைரக்டரான ஸ்ருதி கேட்டதாகவும் கூறினார். அதனையடுத்து தடம் படத்திற்கான ஆடிஷனில் பங்கேற்று தேர்வான என்னை இயக்குநர் மகிழ் திருமேனி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இயலுமா என்று பயந்த போது ஊக்கப்படுத்தியதாகவும், அது ஒரு சிறந்த அனுபவம் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்