நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது தாய் மற்றும் கணவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறை தெரிவித்திருந்தது .
அதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன என்று விசாரித்து வந்தனர் . இந்த நிலையில் தற்போது நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது தாய் மற்றும் கணவர் கொடுத்த மன அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது .மேலும் கணவர் ஹேமந்த் சித்ராவிடம் குடித்து விட்டு பிரச்சினை செய்ததாகவும்,அதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கணவர் ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…