அதிமாக இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றியது இவர்கள் தானாம்!

Default Image

கொரோனாவுக்கு போடப்பட்டுள்ள ஊரடங்கு விதிகளை மீறி இங்கிலாந்தில் வெளியில் சுற்றியது 19-24 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதம் இளைஞர்கள் தானாம். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,181,021 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 283,868 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, 2,403,752 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்தும் உள்ளது. இதுவரை அங்கு 219,183 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 31,855 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இதனால், இங்கிலாந்து நாட்டில் ஆரம்பத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக போடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு விதிகளை பலர் மீறுவதாக கூறப்பட்டுள்ளது. 

அதன் படி, ஊரடங்கு விதிகளை அதிகம் மீறுவது யார் என அந்நாட்டின் ஷெப்பீல்டு மற்றும் அல்ஸ்டர் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 

13 வயது முதல் 24 வயது வரையுள்ள 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 50 சதவிகிதம் பேர் 19 முதல் 24 வயதுள்ளவர்கள் தான் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவதாக கூறியுள்ளனர். இவர்களில் 5 ல் ஒருவர் போலீசில் பிடிபட்டு அபராதம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அதே போல இதே வயதையுடைய இளம் பெண்களும் 25 சதவிகிதம் பேர் இவ்வாறு ஊர் சுற்றுவதாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் பேர் 13-18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்