உண்மையான உறவுக்குள் இந்த மூன்று மட்டும் வரவே கூடாதாம்..!
உறவுகள் என்பது உலகில் உள்ள அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. அனைவருக்குமே உறவுகளை பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. ஒரு உறவில் முறிவு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக அளவிலான அன்பு கொண்ட உறவிலும் கூட பிரிவு ஏற்படும்.
அதிக அன்பு கொண்ட உறவில் எப்படி முறிவு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் உறவுக்கு அன்பு மட்டும் இருந்தால் போதாது, உறவுகளுக்குள் சில விஷயங்கள் தலையிடாமல் இருக்க வேண்டும். அது கணவன் மனைவி உறவாக இருந்தாலும் சரி, அம்மா அப்பா, அண்ணன் தங்கை, மாமியார் மருமகள், நண்பர்கள் யாராக இருந்தாலும் முக்கியமான மூன்று விஷயங்கள் மட்டும் வராவிட்டால் நிச்சயம் அந்த உறவுகளுக்குள் பிரிவும் ஏற்படாது, முறிவும் ஏற்படாது. அவை என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
குறைவான அன்பு
உறவுகளுக்கு முக்கிய ஆதாரமே அன்பு தான். அன்பு இல்லாவிட்டால் ஒரு உறவு உருவாகவே முடியாது. இந்த அன்பு ஒரு உறவில் அதிக அளவில் இருக்கும் பொழுது அந்த உறவு வலுவானதாகவும் இருக்கும், நீண்ட காலம் நீடிக்கவும் செய்யும். இந்த அன்பில் குறைவு ஏற்படும் பொழுதுதான் உறவில் பிரிவு ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே ஒரு உறவை வலுப்படுத்தி நீடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு நாளும் இந்த அன்பில் பற்றாக்குறை ஏற்பட விடக்கூடாது.
பேராசை
இது ஒரு உறவுக்குள் இருக்கக்கூடாத மிக முக்கியமான ஒரு விஷயம். பேராசை வந்துவிட்டால் உறவுகளுக்குள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிரிவை உணடாக்கி விடும், அல்லது அளவுக்கு மீறிய ஆசை உருவாகும் பொழுது உறவுகளுக்குள் பலவீனம் ஏற்படும். ஒரு நபருக்கு பிடித்ததை மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்ள விரும்பினாலும் சரி, நம்மால் பெற முடியாத ஒன்றை அடைய நினைத்தாலும் சரி அது தவறு தான். இந்த உறவு நிலைக்க முடியாது. இந்த பேராசையை ஒழிக்கும் பொழுது உறவுகள் நீண்டகாலம் நிலைக்கும்.
சுயநலம்
சுயநலம் உறவுகளுக்குள் ஒரு நாளும் இருக்க கூடாது. இது ஒரு உறவுக்கு அழகும் கிடையாது. உறவுகளுக்குள் சுயநலம் மறைந்து கிடக்கும் பொழுது எந்த ஒரு உறவும் நீடித்த உறவாக நிலைக்க முடியாது. மிக விரைவாகவே இந்த உறவுகள் உடைந்து விடும். எனவே சுயநலத்தை உறவுகளிடம் இருந்து ஒதுக்கி வைத்தால் மட்டுமே இருவருக்கிடையேயான நட்பும், உறவும் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும்.
ஒரு உறவு வலுவாக நீண்ட நாள் நிலைத்து நிற்க வேண்டுமானால் அன்பு ஒருநாளும் குறையக்கூடாது, பேராசை உறவுகளுக்குள் இருக்கக்கூடாது, சுயநலம் ஒருநாளும் வரவே கூடாது. இது மூன்றும் இல்லாமல் இருக்கக் கூடிய உறவுகள் நிச்சயம் வாழ்வின் கடைசிவரை நிலைக்கக்கூடிய உறவுகளாக மட்டுமே இருக்கும்.