இந்த மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது – மருத்துவத்துறை
மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது என அனைத்து அரசு, தனியார், சுயநிதி மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், மெஸ் கட்டணம் உட்பட விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம், வெள்ளை அங்கி, ஸ்டெதாஸ்கோப், பல்கலைக்கழகப் பதிவுக் கட்டணம், போன்ற அடிப்படைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியக் கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேரும் மாணக்கர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.