கொரோனாவிலிருந்து பாதுகாக்க இந்த விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது.! ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.!

Default Image

கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் சில விதிமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு வகையில் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தற்போது சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பலர் வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர். அந்த வகையில் பிரபலங்களில் பலர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடித்து வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கிற்கு பின்னர் வேலைக்கும் போகும் நபர்கள் கொரோனா பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஹரிஷ் கல்யாண் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் வீட்டை விட்டு வெளியே வந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு யார் சென்றாலும் முதலில் தெர்மல் ஸ்கேனிங் செய்து விட்டு உள்ளே அனுமதிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்ப கூடாது. எப்போதும் எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை சோப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். அலுவலகங்களில் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் கழிவறைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும், யாரிடமும் ஷேக்கன்ட் கொடுப்பதை விட்டு விட்டு வணக்கம் சொல்லி பழகுங்கள். குறிப்பாக அரசாங்கம் சொல்லும் அனைத்து விதிமுறைகளையும் அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடைபிடித்தாலே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

 </p

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்