இந்த வருட விற்பனையில் டாப்-10 வாகனங்கள் இவைகள் தான்…

Default Image

இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக பாதிக்கபட்டது. இந்நிலையில்  இந்த வருடம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் அதிகபட்சமாக ஹீரோ ஸ்ப்ளெண்டர்  1,43,736 வாகனங்களை விற்றுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையானது 2,46,656 எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன விற்பனையில் முதலிடம் வகித்த ஹோண்டா ஆக்டிவா தற்போது கடுமையான விற்பனை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்தாண்டு மார்ச்சில் 1,14,757 என்கிற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், ஹோண்டா சிபி ஷைன் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகை செய்கையில் 190.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

தற்போது இந்த வருடம் விற்பனையில் டாப் 10 வாகனங்களை அதன் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் காணலாம்…

1.ஹீரோ ஸ்ப்ளெண்டர் – 143,736

2.ஹீரோ HF டீலக்ஸ் – 114,969

3.ஹோண்டா ஆக்டிவா – 114,757

4.ஹோண்டா ஷைன் – 86,633

5.டிவிஎஸ் XL சூப்பர் – 32,808

6.ஹோண்டா டியோ – 29,528

7.சுசூகி ஆக்செஸ் – 26,476

8.பஜாஜ் பல்ஸர் – 24,305

9.ராயல் என்ஃபீல்டு கிளாசிக் – 350 24,253

10.டிவிஎஸ் அப்பாச்சி – 21,764

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்