திரிஷா தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த நடிகர்கள் இவர்கள் தான்.!

Default Image

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, அந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்கிறார்.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.  இதனால் இவரது மார்க்கெட் சினிமாயுலகில் உயர்ந்தது. தற்போது இவர் பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், ராம் படத்திலும் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் கூட கௌதம் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடித்த அதன் டீசர் வெளியானது. 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிட்டு வருகின்றனர் . இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அதில் ஒருவர் இந்தியா சினிமாவில் சிறந்த நடிகர்களாக நீங்கள் நினைப்பது யாரென்று கேள்வி கேட்க, அதற்கு கமல், மோகன்லால் மற்றும் அமீர்கான் என்று பதிலளித் துள்ளார். மேலும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, அந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்