பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, நெவாடா ஆகிய மாகாணங்களின் பைடன் வெற்றபெற்றால், அவரே அமெரிக்காவின் அடுத்த அதிபராவார் என்று கூறப்படுகிறது.
உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவிலே இருக்கிறார்.
அதிபர் தேர்தலில் முக்கியமான மாகாணங்களான பென்சில்வேனியா, உட்பட மூன்று மாகாணங்களில் தபால் வாக்குகளை எண்ணுவதிலும், பைடனுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் வழக்குகளை ஜார்ஜியா, மிக்சிகன் மாகாண நீதிமன்றங்கள் நிராகரித்துள்ள நிலையில், ஜார்ஜியா அரசு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பைடன் அதிபராக இன்னும் 6 சபை வாக்குகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, நெவாடா ஆகிய மாகாணங்களின் பைடன் வெற்றபெற்றால், அவரை அமெரிக்காவின் அடுத்த அதிபராவார் என்று கூறப்படுகிறது. ஜார்ஜியா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. 16 வாக்குகளைக் கொண்ட ஜார்ஜியாவில் டிரம்ப் முன்னிலை வகித்த நிலையில், பைடன் முன்னேறினார்.
அதனைதொடர்ந்து நெவாடா மாகாணத்திலும் பைடன் முன்னிலை வகிக்கிறார். அதுமட்டுமின்றி, பென்சில்வேனியா மாகாணத்தில் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகித்து வரும் நிலையில், அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…