இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் இவர்கள் தான்!
இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் வெடி குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 24 பேரும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஜாக்ரன் அஷினும் இஸ்லாமிய அமைப்பான ‘ தவ்ஹீத் ஜமா அத்’ இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழகத்திலும், தேசிய அளவிலும் பரவலாக செயல்பட்டுவரும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.