தமிழில் ரீமேக்காகும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’என்று டைட்டில் வைத்துள்ளதுடன் , இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன்,லாஸ்லியா நடிக்கவுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் ,அதன் ரீமேக் உரிமையை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் ,நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் வாங்கியுள்ளதாகவும் ஏற்கனவே பார்த்தோம்.
தற்போது தமிழில் ரீமேக்காகும் இந்த படத்தினை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே தேனாளி எனும் படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழில் ரீமேக்காகும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர் .இதில் சூரஜ் வெஞ்சாராமூடு நடித்த அப்பா கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கவுள்ளதாகவும் ,அவரது மகன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்கவுள்ளார் .
மேலும் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க ,கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இதன் முலம் இயக்குனராக அறிமுகமாகிறார்கள் . ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு,ராகுல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…