ஆண்களே.. பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கிறது தெரியுமா?
பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது சொல்வதுண்டு. அதிலும் இது சாத்தியமா என்றால் இல்லை. பெண்கள் இல்லாத உலகம் நல்லா இருக்கும் என்று கேட்டால் அது சாத்தியமா என்றால் இல்லை. மேலும் எப்படி ஆண்களைப் பிடிக்காத பெண்கள் இருக்கிறார்களோ அதேப்போல பெண்களைப் பிடிக்காத ஆண்களும் இருக்கிறார்கள்.
ஆண், பெண், திருநங்கை, திரு நம்பிகள் என்ற பாலினங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அதிலும் சில காரணங்களால் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே போல் ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள்.
ஆண்களுக்கு முன்னுரிமை தராத பெண்களை ஆண்களுக்குப் பிடிக்காது. அது காதலானாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும், நண்பனாக இருந்தாலும் யாரா இருந்தாலும் சரிதான். பெண்கள் இந்த ஆண்களே இப்படிதான் என்ற சொல் ஆண்களை மிகவும் கோபமாக்க செய்யும்.
ஆணாதிக்க கொண்ட ஆண்களுக்கு பெண்ணியம் பேசும் பெண்களை சுத்தமாகப் பிடிக்காது. ஏன் என்றால் அவர்கள் எதுக்கு எடுத்தாலும் எல்லா விஷயத்திலும் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.மேலும் பெண்கள் தங்களுக்குக் கீழ்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
சந்தேகம் படும் பெண்களை சுத்தமாக எந்த ஆண்களுக்கும் பிடிக்காது. கணவன் மனைவி உறவில் அதிகமாக வரும் விவாகரத்து வழக்குகளில் அதிக வழக்குகள் சந்தேகம் கொள்வது முதல் காரணமாகக் கூறப்படுகிறது. சந்தேகம் என்பது ஒருவித மனநோய். இது ஆண்களுக்கும், பெண்களுக்கு பிடிக்காத பொதுவான விஷயம் ஆகும் .
அதிகமாக பேசும் பெண்கள்,வளவளவென பேசும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. கணவன் மனைவிக்குள்ளே இது தினமும் நடக்கும் விஷயம்தான். தங்களுடைய தேவைக்காகப் பழகும் பெண்களை ஆண்கள் ஈஸியாக கண்டுபிடித்து விடுவார்கள். அந்த பெண்ணிடம் இருந்து தள்ளியே இருப்பார்கள். அந்த பெண்ணிடம் இருந்து ஆண்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது.