உங்களை வயதானவராக தோற்றம் கொள்ளச்செய்யும் 6 உணவுகள்.!

Default Image

உணவே மருந்து; மருந்தே உணவு – என்ற  வாக்கியத்தை நாம் கேள்வியுற்றிருப்போம். ஒவ்வொருவரும் வாழ்வில் இளமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் உண்ணும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை முடிவு செய்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் உட்கொள்ளும் உணவுகள் தான் நமது இளமை தோற்றத்தையும் நிர்ணயிக்கின்றன என்பதை நீர் அறிவீரா?

இந்த பதிப்பில் உங்கள் இளமையைக் குலைத்து, உமது வயதை அதிகரித்துக் காட்டும் சில உணவுகள் குறித்து படித்து அறியலாம்.

மிட்டாய்கள்

இன்றைய காலத்தில் காணப்படும் மிட்டாய்களில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு கேடு விளைவிப்பதோடு, உடலின் அழகையும் குலைக்கும். உடலின் இளமைத் தோற்றத்திற்கு முக்கிய காரணிகளாக இருப்பவை –  கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகும்.

இந்த இரண்டிற்கும் சர்க்கரை ஒரு பரம விரோதி; இதனால் உடலின் இளமை தோற்றம் பாழாகிறது. பிரட் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளில் இருக்கும் சர்க்கரையும் அழகைக் குலைப்பதே!

சுட்ட இறைச்சி

தீயில் சுட்டு எடுத்த இறைச்சி வகைகளில் இருக்கும் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன்கள் உடல் அழகைக் குறைத்து, முதுமையை பரிசளிக்க வல்லவை; ஆகையால் இவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

மதுபானங்கள்

மது பானங்களை அதிகம் பருகினால் உடலுக்கு நல்லதல்ல; கல்லீரலுக்கு ஆபத்து என அறிவோம். கல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப்போனால், உடலில் விஷத்தன்மை கொண்ட டாக்சின்கள் பரவி உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு என இரண்டையும் அழித்துவிடும்.

உப்பான உணவுகள்

அதிக உப்புத்தன்மை கொண்ட உணவுகளும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற அழகின் முக்கிய காரணிகளை அழிக்கக் கூடியவை; ஆகையால் இம்மாதிரியான உணவுகளை தவிர்க்க முயலுங்கள்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் கலக்கபப்டும் சர்க்கரை மற்றும் அதன் அமிலத்தன்மை பற்கள் மற்றும் தேகம் ஆகிய இரண்டின் அழகையும் குலைத்து, இரண்டையும் விரைவில் முதுமை அடையச் செய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

காபி

காபியில் இருக்கும் காஃபின் எனும் பொருள் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை அழிக்கக்கூடியது. இந்த இரண்டும் உடலில் இருந்து அழிந்தால் முதுமை விரைவாக நிகழும்.

பதிப்பில் கூறிய அனைத்து விஷயங்களையும் நினைவில் கொண்டு, ஆரோக்கியத்தை தரும், அழகைக் காக்கும் உணவுகளை உண்டு நீடுழி வாழ்வீராக!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்