இந்த 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! அடுத்த 3 நாட்களுக்கும் இருக்கு.!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

tn heavy rain

சென்னை : சென்னையில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை

மேலும், இன்றைய தினம் (26ம் தேதி) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

19 மாவட்டங்களில் கனமழை

நாளை மறுநாள் (28ம் தேதி) தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10 மாவட்டங்களில் கனமழை

இதனை தொடர்ந்து வருகின்ற 29ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வெப்பநிலை நிலவரம்

உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu