கொரோனாவுக்கு பலியானவர்களில் 72 சதவீதத்தினர் இந்த 5 நாட்டுக்காரர்கள் தான்.!

Default Image

உலகம் முழுக்க 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில்,அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்துஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இதுவரை 32,40,038 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. அதில், 10,10,721 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில், 5 நாடுகளை சேர்ந்தவர்களின் பலி  எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.

அவை, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளாகும். இதில், அமெரிக்காவில் 61,680 பேரும், ஸ்பெயினில் 24,275 பேரும், இத்தாலியில் 27,682 பேரும், பிரான்சில் 24,087 பேரும், இங்கிலாந்தில் 26,097 பேரும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்