இந்த 14 மாவட்டங்களில் இன்று கனமழை.. அடுத்த 6 நாட்களுக்கும் இருக்கு – வானிலை அலர்ட்.!
சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை : தென் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும், ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் எனவும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு தான் குறையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழையும் அடுத்த 6 நாட்களுக்கும் இதே நிலைமை தான் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
அதன்படி, கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025