300 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய தெறி ஆல்பம்.!

தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல்கள் நிறைந்த ஆல்பம் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. .
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப காலமாக விஜய் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் ஹிட் செய்து வருகிறது. ஆம் படங்கள் மட்டுமில்லாமல் பாடல்களும் தான். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள ஆல்பம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் நிறைந்த ஆல்பம் யூடுபில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
#TheriAlbumHits300Mviews
Celebrating mammothMillion+ views for #Theri Album on Youtube ????
A @gvprakash Musical ????https://t.co/mfcFha2YZq@actorvijay @Atlee_dir @Samanthaprabhu2 @iamAmyJackson @theVcreations @AntonyLRuben @george_dop @muthurajthangvl pic.twitter.com/7TCPC0q57w— Think Music (@thinkmusicindia) June 19, 2020