பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமர் பதவி விலக முடிவு! காரணம் என்ன?!
2016ஆம் ஆண்டு தெரேசா மே என்பவர்ம் பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதாக ப்ராக்க்ஷிஸ்ட் உடன்பாட்டில் ஒப்பந்தமாக நிறைவேற்றி அதனை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு கோரியிருந்தார்.
இந்த முடிவு அவரது கட்சி எம்பிகளுக்கே பிடிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் 3 முறை நிராகரிக்கப்பட்டது. அதனால் தெரசா மே கொண்டுவந்த உடன்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைக் காரணமாகக் கொண்டு அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரிட்டன் பிரதமராகவும் புதியவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் முக்கியமானவர் முக்கியமானவர்கள் போரிஸ் ஜான்சன், எஸ்தர் மேக்வே, கோரி ஸ்டூவர்ட் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பிரிட்டன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
DINASUVADU