சித்ரா உயிருடன் இருக்கும் போது அனுபவிக்காத சித்திரவதையே இல்லை எனவும், சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த தான் காரணம் எனவும் அவரது நண்பர் ரோஹித் கூறியுள்ளார்.
பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமாகிய சித்ரா அவர்கள் தற்கொலை செய்து உயிர் இழந்த சம்பவம் தற்போது வரையிலும் பலரது மனதையும் விட்டு நீங்காத முடியாத ஒன்றாகவும் சந்தேகத்துக்குரிய ஒரு மர்மமான மரணமாகவுமே இருந்து வருகிறது. இந்நிலையில், அவரது காதலரை நிச்சயம் செய்து திருமணம் நடக்கவிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்த தற்கொலையின் போது அவரது காதலன் தான் உடன் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றாக உள்ளது. அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது பல வதந்திகள் சித்ரா குறித்தும் ஹேமந்த் குறித்தும் கூறப்பட்டு வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹேமந்த் நண்பர் ரோஹித் சர்மா என்பவர் தற்பொழுது இதுகுறித்த உண்மைகளை உடைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், சித்ரா உயிருடன் இருக்கும் பொழுது அனுபவிக்காத சித்திரவதையை இல்லை எனவும், ஹேமந்த் ஒரு மனித தனமாக சித்ராவிடம் நடந்து கொள்ளவில்லை எனவும் ஆதாரமான சில தகவல்களை தெரிவித்துள்ளார். சித்ரா காதலிக்கத் தொடங்கும் பொழுது ஹேமந்த் குறித்து அவ்வளவாக தெரியாவிட்டாலும், அதன் பின்பு சித்ராவிற்கு ஹேமந்த்தின் உண்மை முகம் மற்றும் அவனது கொடூரமான குணத்தை தெரிந்து கொண்டார். ஆனாலும் காதலித்து விட்டோமே என்ற ஒரு காரணத்திற்காக கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் சித்ரா சித்திரவதையை அனுபவித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இனி நடிக்கக் கூடாது எனவும் சித்ராவை மிரட்டினான். ஆனால் இப்பொழுது தான் நான் தொடங்கி இருக்கிறேன் திடீரென்று நிறுத்தி விட்டால் நன்றாக இருக்காது என சித்ரா கூறினார். இருப்பினும் அவன் கேட்கவில்லை.
ஒருமுறை நாங்கள் வெளியில் சென்று இருக்கும்பொழுது அவ்வளவு மக்கள் முன்பதாக கூட சித்ராவுக்கு யாரோ போன் செய்தார்கள் எனும் காரணத்திற்காக ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை சித்ரா மீது தூக்கி வீசினார். ஹோட்டலில் இருந்த அனைவரும் முன்பும் சித்ரா அழுது கொண்டுதான் நின்றார். அதன் பின்பு நான் சித்ராவைப் பார்க்கவே இல்லை, கடைசியாக சித்ரா இறந்து விட்டார் என்ற செய்திதான் எனக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பதாக ஹேமந்த் சித்ராவை அடிப்பது எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஒரு மனிதனை அடிப்பது போன்று அவன் நடந்து கொள்ளவே மாட்டான்.
நகங்களை வைத்து முகத்தில் கைகளில் கிள்ளுவது போன்ற செயல்களை தான் செய்வான், பலமுறை நானும் அவள் ஒரு சீரியல் நடிகை முகத்தை தொலைக்காட்சி முன்பதாக காட்ட வேண்டும். இவ்வாறு செய்யாதே என்று சொன்னாலும் அவன் அடுத்த நாளே கூட மறுபடியும் சண்டையிடுவதற்கு தயாராக இருப்பான். அவனது முன்னாள் வாழ்க்கையில் பல பெண்களை ஏமாற்றி இருந்தான் ஆனால் திருமணம் செய்து கொண்டானா என்பது எனக்கு தெரியாது. உண்மைகள் தெரிந்தும் சித்ரா காதலித்து விட்டோமே என்ற காரணத்திற்காக பொறுத்து வந்தார் கடைசியில் சித்ராவின் நிலை இப்படி ஆகிவிட்டது என மிக வருத்தத்துடன் கூறுகிறார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…