தனது உடை குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள நடிகை கனிகா அம்மா என்பவர் இப்படித்தான் உடை அணியவேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு ரூல் புக் எதுவும் கிடையாது என கூறியுள்ளார்.
மலையாளத் திரையுலகின் பிரபலமான நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் எப்பொழுதும் தனது உடற்பயிற்சி மற்றும் அழகிய மாடர்ன் உடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர் கனிகா. இதற்கு சில சமயங்களில் தவறான விமர்சனங்கள் எழுவதையும் அவர் கவனித்துள்ளார். தற்பொழுதும் அரைக்கால் அணித்தவாறுள்ள புகைப்படம் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு, விமர்சனங்கள் வருவதற்கு முன்பதாகவே அதற்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
அதாவது நான் அம்மா தான், ஆனால் நான் கட்டையாக உடை அணிய ஆசைப்படுகிறேன். எனது நண்பர்களுடன் வெளியே சுற்ற ஆசைப்படுகிறேன். நான் எனது வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அதற்காக எனது மகனை நேசிக்கவில்லை என்று அல்ல, நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். எப்படிப்பட்ட பெற்றோராக இருக்க வேண்டும் என்பதற்கு அம்மாவுக்கு ரூல் புக் எதுவும் கிடையாது எனவும், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு குடும்ப சூழலும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்து இருக்கும். தாய் என்பவள் அவருடைய தோற்றத்தை வைத்து மட்டும் எடைபோட கூடியவள் அல்ல என எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனிகா.
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…