தலீபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை – கனடா பிரதமர்!
தலீபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். எனவே, ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை மற்றும் அமைதியற்ற நிலையும் உருவாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாங்கள் எந்தவித எதிரிகளையும் சம்பாதிக்க விரும்பவில்லை எனவும், எங்கள் நிலப்பரப்பை உலகில் யாருக்கும் அல்லது எந்த நாட்டுக்கும் எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என உறுதியளிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச சமூகம் தங்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், தலிபான்களை ஆஃப்கானிஸ்தான் அரசாக அங்கிருக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் கனடா நாட்டின் சட்டத்தின்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே கருதப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.