வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை.!
வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை, வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நடிகர் வடிவேலு , இவருக்கு வைகை புயல் என்று அடைமொழியும் உள்ளது, இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் கூட இவர் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாகவும், அதனை அவருடன் பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ள தாகவும் , கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. மேலும் ட்வீட்டரில் ரசிகர் ஒருவர் வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர் என்று ஓரு வீடியோவை பதிவு செய்தார் அதைப்பார்த்த நடிகர் விவேக் “வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை, வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று பதிலளித்துள்ளார்.
உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! https://t.co/BaKsmsOzuH
— Vivekh actor (@Actor_Vivek) May 29, 2020