தாயாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்!
பூமிகா படத்தை பார்ப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும் என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் திட்டம் இரண்டு சோனிலிவ் ஓடிடியில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் பூமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியுள்ள ஓணத்தை முன்னிட்டு நாளை விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குழந்தைக்கு தயாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது ” இப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். நான் இது போன்ற வேடங்களில் மட்டுமே இப்போது நடித்து வருகிறேன். படத்தில் தாயக நடித்தது மகிழ்ச்சி. தாயாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எனக்கு கதை தான் முக்கியம். பூமிகா படத்தை பார்ப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.