குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை.!
கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை முடிந்து குணமடைந்தவருக்கு உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்து விடும். அதனால், அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை – தென் கொரியா ஆராய்ச்சியாளர்கள்.!
உலகம் முழுக்க கொரோனா தொற்று பொதுமக்களை வெகுவாக அச்சமடைய வைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உலகம் முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், குணமடைந்த பலருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செயப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது, தற்போது கொரோனா கண்டறிவதில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பி.சி.ஆர் கருவி மூலம் ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால், அந்த வைரஸ் உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்துவிட்டதா என பார்க்கமுடியாது என தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கொரோனா பாதித்த ஒருவர் சிகிச்சை முடிந்து முழுவதும் குணமடைந்தவருக்கு உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்து விடும் அதனால், அவருக்கு மீண்டும் கொரோனா பாதிக்க வாய்ப்பில்லை எனவும், ஒரு வைரஸ் அழிக்கப்பட்டாலும், அந்த இறந்த வைரஸ் மனித உடலில் சில மாதங்கள் இருக்கும். அப்படி இருக்கையில், பி.சி.ஆர் முறைபடி சோதனை செய்கையில் கொரோனா இருப்பதாக மட்டுமே காட்டும். கொரோனா இறந்துவிட்டதா அல்லது உயிருடன் இருக்கிறதா என்பதை காட்டாது. எனவே கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என அழுத்தமாக கூறுகின்றனர் தென் கொரியா ஆராய்ச்சியாளர்கள்.