கோயில் அருகே தேவாலயம் கட்டுவதற்கு தடையில்லை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் ஊர்காத்த சாமி கோயில் அருகே தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதற்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை; இதனால் மத நல்லிணக்கமே ஏற்படும்; அனைவருக்கும் அனைத்து உரிமையும் இங்கு உண்டு என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.