“எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது” தமிழக முதல்வர் திட்டவட்டம்.!!

Default Image

பாரதிய ஜனதா உள்ளிட்ட எந்த கட்சியுடனும், அதிமுக கூட்டணி வைத்திருக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்டதில் திமுக – காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றிப் போர்க்குற்ற விசாரணை நடத்தித் தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டாலும் எதிர்க்க வேண்டியதை கண்டிப்பாக எதிர்ப்போம் என  திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆட்சி கலைந்துவிடும் என்ற டிடிவி தினகரன் கனவு ஒருபோதும் ஈடேறாது என்று கூறிய முதலமைச்சர், துரோகம் இழைத்தவர்களை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது என்று எச்சரித்தார்.

இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற கண்டன பொதுகூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 2008ஆம் ஆண்டு பிரியங்கா காந்தி, வேலூர் சிறையில் நளினியை சந்தித்த போது, தந்தையை கொலை செய்தது யார் என தெரிந்த பின்பு தான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதேபோன்று, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில், போர்க்குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வலியுறுத்தி, அமைச்சர்கள் பங்கேற்ற பொதுகூட்டங்கள் நடைபெற்றன.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்