தமிழ் சினிமாவில் குரூபிசம் இருக்கு – நட்டி நட்ராஜ்.!
தமிழ் சினிமாவில் குரூபிசம் இருக்கு என்று நட்டி நட்ராஜ் பதிவிட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் காரணம் என்று பலரும் குற்றச்சாட்டி வந்தனர். வாரிசுகளின் ஆதிக்கத்தால் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கூட பாலிவுட் திரையுலகில் தன்னை பணியாற்ற விடக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு கூட்டம் உழைத்து வருவதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் தான் விருது வென்ற பெற்ற பட வாய்ப்புகள் இந்தியில் மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாகவும், பல தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தவர் நட்டி நட்ராஜ். மேலும் இவர் லவ் ஆஜ் கல் , பிளாக் பிரைடே ஆகிய பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நெபோட்டிசம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல, ஆனா குரூபிசம் இருக்கு. யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கிறாங்க, யாருங்க நீங்க? என்ற பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க????…
— N.Nataraja Subramani (@natty_nataraj) July 27, 2020