கொரோனா தடுப்பூசிகள் வைத்திருப்பதில் உலக நாடுகளிடையே பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்கின்றன.இதனால் ஆசியா,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்றடையாமல் இருக்கின்றன.
இந்த நிலையில்,கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதனைப் பற்றி கிரேட்டா கூறுகையில்,”கொரோனா தடுப்பூசி பாகுபாட்டைக் குறைக்க சர்வதேச நாடுகளின் பங்களிப்பு தேவை.காலநிலை நெருக்கடிகளைக் உலக நாடுகள் சேர்ந்து கையாள்வதைப் போல,தற்போது முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே உதவ வேண்டும்.
அதுமட்டுமல்லாமல்,கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.ஏனெனில்,பணக்கார நாடுகள் அதிகமான தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன.ஆனால்,ஏழை நாடுகளிடம் தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லை.
மேலும்,48% கொரோனா தடுப்பூசிகள் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வழக்கப்பட்டுள்ளன.ஆனால்,ஏழை நாடுகளுக்கு 0.1 % மட்டுமே தடுப்பூசிகள் வழக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…