இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரச்சனை உள்ளது- ட்ரம்ப்!
இந்தியா மேற்கொள்ளும் கொரோனா நடவடிக்கையை பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா சிறந்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிலேயே அதிக அளவில் 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நாடு அமெரிக்காதான் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதனால் பாதிப்பு எண்ணிக்கை 6 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாகவும், கொரோனா தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் சீனாவில் தொற்று அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.