விமானத்தில் கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் உள்ளது! ஆனால் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு!
விமானத்தில் கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அறைகள், அரங்குகள் மற்றும் மூடப்பட்ட அறைகளுக்குள், கொரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகள் தும்மினாலோ அல்லது இருமினாலோ அதனால் வைரஸ் பரவும் ஆப்பத்து உள்ளது.
ஆனால், விமானத்தில் பயணிக்கும் போது வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மார்ச் 9-ம் தேதி, டெல் அவிவ் நகரில் இருந்து,ஃ பிராங்பர்ட் சென்ற விமானத்தில் 102 பேர் பயணித்துள்ளனர். இதில் 7 கொரோனா நோயாளிகள் இருந்த நிலையில், 4 பேர் அறிகுறிகளுடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் யாரும் மாஸ்க் அணியவில்லை. இந்த விமானத்தில் பயணித்தவர்களை ஆய்வு செய்ததில், 2 பேருக்கு மட்டும் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், சீரான இடைவெளியில் புதுப்பிக்கப்படும் காற்றோட்டத்தின் காரணமாக, வைரஸ் பரவும் ஆபத்து குறைந்திருக்கலாம் என்று, மாஸ்க் அணிந்திருந்தால் இந்த ஆபத்தும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.