“ஊர்ல பொண்ணு கிடைக்கிறதே பஞ்சமா இருக்கு “சூரரைப்போற்று நீக்கப்பட்ட காட்சி..!
சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி 2வது வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் ட்வீட்டரில் ஹாஸ்டெக் செய்து நேற்று கொண்டாடி தீர்த்தனர். அதனை தொடர்ந்து இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சியும் நேற்று வெளியாகி ரசிகர்கள் கண்டுகளித்தனர். அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான 2 வது நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
And the celebration continues… Here’s #DeletedScene2 Maara vs Mom!#100DaysOfSooraraiPottru????https://t.co/E7vOSewNmU@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @deepakbhojraj @thanga18 @gopiprasannaa @guneetm pic.twitter.com/AXqzOEwUWI
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 20, 2021