அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பொதுவான ஒற்றுமைகள் சில…!!
அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பொதுவான ஒற்றுமை ஒன்றுண்டு. இரண்டுமே பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்று குடியேறிய வெள்ளையின மக்களால் உருவாக்கப் பட்ட தேசங்கள்.
இரண்டு தேசங்களிலும், பூர்வகுடிகள் ஆக்கிரமிப்பாளர்களால் அடித்து விரட்டப் பட்டார்கள். வந்தேறுகுடிகள் அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு உரித்தான மக்கள், உரிமைகள் மறுக்கப் பட்டு, சிறியளவு பிரதேசத்திற்குள் ஒடுங்கி வாழ்கின்றன.