நாள்தோறும் நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய தேங்காயை உடைக்கும்போது அதில் வரக்கூடிய தண்ணீரை குடிப்பார்கள் சிலர் கொட்டுபவர்கள் பலர். ஆனால் அந்த தேங்காய் தண்ணீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது தெரியுமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது தைராய்டு சுரப்பி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் ஆற்றல் அதிகரிப்பதுடன் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இந்த தேங்காய் தண்ணீர் அதிகம் பயன்படுகிறது. சிறுநீரக பிரச்சனை, காய்ச்சல், சளி என அனைத்தையும் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை தேங்காய் தண்ணீரில் உள்ளது. உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற இது பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.
மேலும் செரிமான பிரச்சனைகளை நீக்குவதற்கும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் இது உதவுகிறது. தினமும் இந்த தேங்காய் தண்ணீரை குடித்து வருவதன் மூலம் பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும், உடல் எடையை குறைக்கவும் செய்கிறது. மேலும் உடல் வறட்சி நீங்குவதுடன் பளபளப்பான சருமத்தையும் தருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற நோய்களை தடுக்க இது பெரிதும் உதவுகிறது. மேலும் அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு ஆல்கஹால் காரணமாக ஏற்படக்கூடிய தலைவலிக்கு இந்த தண்ணீர் பயன்படுகிறது. இவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ள தேங்காய் தண்ணீரை கொட்டாமல் கிடைக்கும் பொழுது குடித்து நன்மைகளை பெறுவோம்
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…