அட இவ்வளவு நன்மைகள் இருக்கா….? நிலக்கடலையில் உள்ள பயனுள்ள நன்மைகள்…!!!
நிலக்கடலை நிலத்துக்கு அடியில் விளையும் கடலை என்பதால் இது பலருக்கு பிடித்தாலும், சிலருக்கு பிடிப்பதில்லை, ஏனென்றால் நிலத்துக்கு அடியில் இந்த கடலை விளைவதால், நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இந்த கடலை ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் நல்லது.
பயன்கள் :
ஹார்மோன் வளர்ச்சி :
நிலக்கடலை சாப்பிட்டு வருவதால், பெண்களுக்கு இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. மேலும் இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
நிலக்கடலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அளிக்கிறது. இது நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
மன அழுத்தம் :
நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. மேலும் மனா அழுத்தத்தை தவிர்க்கிறது.
வயிற்று பிரச்சனை :
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. பித்தப்பை கல் உருவாகுவதை தடுக்கிறது. கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது.