இயற்கை வரமாக நமக்குக் கிடைத்துள்ள பழங்கள் ஒவ்வொன்றிலுமே எண்ணற்ற நன்மைகளும் நோய் எதிர்ப்பு சக்திகளும் அதிகமாக அடங்கியுள்ளது. அதிலும் கிவி பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் அடங்கியுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சீனாவின் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படக்கூடிய பெர்ரி வகையை சேர்ந்த பழம் தான் கிவி பழம், இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலாக இந்த பழம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து இந்த பழத்தில் காணப்படுகிறது. இதில் அதிகமான பொட்டாசியம் சத்து காணப்படுவதால் இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன் இதய நோயால் ஏற்படக்கூடிய உயிர் இழப்பையும் 49% குறைக்கும் வாய்ப்பு இந்த பழத்தின் மூலம் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த பழத்தில் அதிகமான நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் ,செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய கோளாறுகளை தவிர்ப்பதுடன் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
மேலும் இந்த பழத்தில் உள்ள என்சைம்கள் காரணமாக புரதங்களை செரிமானம் செய்ய உதவுவதுடன், செரிமானம் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை உட்கொள்ளலாம். இதிலுள்ள குறைந்த அளவு கலோரிகள் காரணமாகவும் நார்ச்சத்துக்கள் காரணமாகவும் உடல் எடை குறைப்பதற்கு இது மிகவும் பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் தைரியமாக உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம். இதில் குறைந்த அளவு சர்க்கரையும் அதிக நீர்ச்சத்தும் உள்ளது. மேலும் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இந்த பழத்தில் அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக்கூடிய தன்மை காணப்படுகிறது. இரவு நேரங்களில் உறக்கம் வராமல் அவதிப்படுவோர் இந்த பழத்தை உண்டு விட்டு தூங்கலாம். இது நல்ல உறக்கத்தை அளிக்கும். மேலும் கர்ப்பிணிகள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம், இதில் உள்ள போலிக் அமிலம் காரணமாக வயிற்றில் வளரக்கூடிய குழந்தையின் மூளை மற்றும் அறிவாற்றல் திறனை அதிகரிக்க உதவுகிறது.
குழந்தையின் நரம்பு மண்டலத்தையும் பிரச்சனைகள் இன்றி பாதுகாக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் இந்தப் பழத்தைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். மேலும் குடல் புண் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களையும் நீக்குகிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக் கூடிய தன்மை இந்த பழத்தில் அதிகம் காணப்படுகிறது. எனவே புற்றுநோய் அறிகுறிகள் இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். கண்பார்வை அதிகரிக்க உதவுவதுடன், உடலில் ஏற்படக்கூடிய அழற்சிகளுக்கு எதிராகவும் இது போராடுகிறது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் முக அழகைப் பராமரிக்கவும், தலைமுடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. முகப்பருக்கள் அதிகம் உள்ளவர்கள் இப்பழத்தை உட்கொள்ளலாம் அல்லது கிவி பழத்தின் தோலை முகத்தில் தடவி வரும்பொழுது முகப்பருக்கள் மறைந்து பளபளப்பான முக பொலிவு பெறலாம்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…