பார்ப்பதற்கு அழகு குறைவாகவும் சாதாரணமாகவும் கிடைக்கக் கூடிய சிறு தானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு, மிகுந்த ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. ஆனால் அது குறித்து மக்கள் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததால் வெள்ளை அரிசியை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேழ்வரகில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், புரதம், நார்சத்து அடங்கியுள்ளதால் இதிலுள்ள மாவு சத்து அரிசியைவிட அதிக அளவு சத்து உடையது. இது சர்க்கரை வியாதி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த கேழ்வரகில் உள்ள சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் காரணமாக வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாவதுடன் விளையாட்டு வீரர்கள் இதனை அதிகம் பயன்படுத்தலாம். இதன் மூலம் செயல் திறன் அதிகரிக்க உதவும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த கேழ்வரகை பயன்படுத்தலாம். இதில் கொழுப்பினை கரைக்கக்கூடிய நார்சத்து அடங்கி உள்ளது.
எனவே உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த கேழ்வரகை பயன்படுத்தலாம். இதில் உள்ள நார்சத்து காரணமாக மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து நிம்மதி தருவதுடன் இரத்த சோகையை தடுக்கவும் இது உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு கேழ்வரகு நண்பன் என்றே கூறலாம். எனவேதான் நீரிழிவு நோயாளிகளுக்கு கேழ்வரகு பயன்படுத்துமாறு மருத்துவர்களால் அறிவுறத்தப்படுகிறது. அரிசி கோதுமைகளை விடவும் கேழ்வரகு மிகவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை உண்டு பயனடைவோம்.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…