கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!
அனைத்து காலகட்டங்களிலும் மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்றால் அதில் ஒன்று கொத்தமல்லி. இதனால் தான் அதன் நன்மை மற்றும் பயன்கள் நமக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த கொத்தமல்லியில் எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. சாதாரணமாக மணத்திற்காக நாம் உபயோகிக்கிறோம் என்று நினைத்தாலும் அது அல்ல உணமை. கொத்தமல்லியில் பல்லாயிரக்கணக்கான நன்மைகள் அடங்கியுள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
கொத்தமல்லியில் நன்மைகள்
கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு மேலே பத்து போடுவதால் கண் பிரச்சனைகள் நீங்குகிறது. மேலும் கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள் மறைய இந்த கொத்தமல்லி உதவுகிறது. மேலும் கொத்தமல்லி சருமத்தில் தடவினால் சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய தன்மை கொண்டது, வயிற்று வலி அஜீரணக் கோளாறுகள் மற்றும் அம்மை நோய் ஆகியவற்றை இது குணமாக்குகிறது. கொத்தமல்லி விதைகளை அதாவது தனியா எனப்படும் விதைகளை தேநீர் செய்து குடித்தால் சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப் படாமல் விரைவில் வெளியேறும்.
நெஞ்செரிச்சல், அடிக்கடி ஏப்பம் வருவது மற்றும் வாயு பிரச்சனை ஆகியவையும் சரியாகும். இவ்வளவு நன்மைகளை கொண்ட கொத்தமல்லியை நாம் பயனுள்ளதாக உபயோகிப்போம்