ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற பாதுகாப்பு காரணங்கள் ஏதும் இல்லை – இந்திய தூதரகம்

Default Image

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற பாதுகாப்பு காரணங்கள் ஏதும் இல்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வங்கி சேவை, அங்கிருந்து நேரடி விமான சேவை பெறுவதில் சில இடையூறுகள் உள்ளன. வங்கி சேவை, விமான சேவை இடையூறுகள் மத்தியில் இந்தியாவிற்கு பயணிக்க விரும்பினால் பயணிக்கலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி திட்டங்களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் கல்விக்கு மாறியுள்ளதாகவும், இடையூறின்றி கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களுடன் கலந்து ஆலோசிக்கலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்