மாஸ்டர் படத்தில் அரசியல் வசனங்கள் இல்லை.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார், சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திலிருந்து வெளிவந்த மூன்று லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் அரசியல் வசனங்களை கொண்டதுதான் இருக்கிறது, அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வசனம் எழுதிய ரத்னகுமார் கூறியது மாஸ்டர் படம் அரசியல் வசனம் இருக்காது இந்த படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.