“வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை”- அடம்பிடிக்கும் கிம் ஜாங் அன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வட கொரியாவில் ஒருவருர் கூட கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது.
தற்போது உலகெங்கிலும் கொரொனோ வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.வைரஸின் தாக்குதலுக்கு பலர் இறந்துள்ளனர்.இந்நிலையில் வடகொரியாவானது தங்கள் நாட்டில் எவருக்கும் கொரொனோ தொற்று பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது.
எனினும், கொரொனோ வைரஸானது ஆரம்பத்தில் சீனாவில் இருந்து பரவியதால் அதன் நட்பு நாடான வடகொரியாவிலும் அதன் தாக்கம் தற்போது வரை இருக்கலாம் என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு(WHO) எழுந்துள்ளது.
இதனால் WHO-இன் வடகொரிய அதிகாரி எட்வின் சால்வடோர் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.அதில் ‘கடந்த ஆண்டில் கொரொனோ அறிகுறிகள் இருப்பதாக தெரிந்த 23 ஆயிரம் பேரை சமீபத்தில் பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரொனோ தொற்று இல்லை’, என்று குறிப்பிட்டுருந்தார்.
கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளை வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் வழங்கவில்லை. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் , அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்று கூறியுள்ளார்.