பயனர்களின் தகவல் திருட்டு.! ஒப்புக்கொண்டதா பேஸ்புக்.? 725 மில்லியன் டாலர் கொடுக்க ஒப்புதல்.!
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது.
கடந்த 2016 ஆம் அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்க பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்த பிரிட்டிஷ் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்படுத்த அனுமதித்ததாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை 2018முதல் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று, பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதனை ஒப்புக்கொண்ட போதும், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, எங்கள் பயனர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதி அபராதத்தொகையை அளிக்க சம்மதித்துள்ளோம் என கூறியுள்ளனர்.