முருகப்பெருமானும் காதல் மனைவி வள்ளியும் சம உயரத்தில் இருக்கும் அதிசய தீர்த்தகிரி சிறப்புகள்!

Default Image

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை நோக்கி முருகப்பெருமான் செல்லும்போது சற்று களைப்பாக இருந்ததால் இளைப்பாறி சென்ற இடம்தான் வேலூர் தீர்த்தகிரி சன்னிதானம். இங்கே முருகன் இளைப்பாறி சென்றதற்கான பாதச்சுவடுகள் கோயில் மலையடிவாரத்தில் தற்போதும் காணப்படும். இந்த கோயில் சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

இந்த தீர்த்தகிரி கோவிலில் மலையடிவாரத்தில் விநாயகர் சன்னதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதற்கு எதிரே கோவில் திருக்குளம் அமைந்துள்ளது. அதனருகே 222 படிகள் கொண்ட மலை இருக்கிறது. அந்த படியில் முதல் 10 படிகள் ஏறினாலே முருகனின் பாதச்சுவடுகள் காணப்படும். அடுத்ததாக முருகனுக்கு பணிவிடை செய்த கன்னிமார்கள் சன்னதி இடதுபுறம் அமைந்துள்ளது.

கோவிலுக்கு மேற்கே ஆலமரமும், கிழக்கே அத்திமரமும், தென்கிழக்கே அரசமரமும், வடகிழக்கே நாவல் மரமும் உள்ளன. அங்குள்ள ஆலமரத்தின் அடியில் தற்போதும் சுனை தீர்த்தம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாகவே இந்த கோவில் தீர்த்தகிரி என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் முருகன் சிலையும் முருகன் காதலித்து மணந்த வள்ளியின் சிலையும் சம உயரத்தில் இருக்கும். தெய்வானை சிலை சற்று உயரம் குறைவாக இருக்கும்.

இதுவே இந்த கோவிலின் சிறப்பு. இந்த கோவிலில் வந்து வணங்குபவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என அனைத்தும் கிட்டும். இக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா இரண்டு நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்